சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் ஆகிய ரெயில் நிலைய பகுதிகளில் ரயிலில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டால் சுட்டுப்பிடிக்க போலீசார் துப்பாக்கிகளுடன் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் நேற்று முதல் ரெயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.