எனவே பெண் விவகாரத்தில் இந்த பயங்கர கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்தநிலையில் ராஜேந்திரன் கொலையில் தொடர்புடையவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. சங்ககிரி தனிப்படை போலீசார், ஆரோவில் போலீசார் உதவியுடன் அந்த விடுதிக்கு சென்று, அறையில் பதுங்கியிருந்த 8 பேரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
கைதானவர்கள் சேலம் சங்ககிரி கஸ்தூரிபட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சசிகுமார் (21), தப்பக்குட்டை பாஸ்கர் மகன் கவுதமன் (21), பள்ளிப்பாளையம் அருந்ததியர் தெரு பழனிச்சாமி மகன் கவுதமன் (21), கஸ்தூரிபட்டி மணி மகன் கார்த்திகேயன் (23), தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ்குமார் (25), வரப்பளங்கரை மாரப்பன் மகன் பாரதி (18), காரிப்பட்டி மாரிமுத்து மகன் மணிகண்டன் (22), திருச்செங்கோடு கொல்லப்பாளையம் மாதேஸ்வரன் மகன் லோகபிரகாஷ் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் 8 பேரையும் கைது செய்து சங்ககிரிக்கு கொண்டு சென்றனர்.