சங்ககிரி அருகே வளையசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி ராஜாமணி (65) தனது மனைவியை பள்ளிக்கு டூவீலரில் அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.