சேலம் வழியாக சென்ற ரயிலில் 38 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரெயில்வே போலீஸ் தலைமை காவலர் சிவமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கோரக்பூர் - திருவனந்தபுரம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். பொம்மிடி - கருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது, ரயிலின் பின்பக்க பொதுஜன பெட்டியில் பாத்ரூம் அருகில் கேட்பாரற்று கிடந்த மூன்று சோல்டர் பேக்குகளில் இருந்து சுமார் 38 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்தி