சேலம் மாவட்டம் சங்ககிரி ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் 2 பேர், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நிற்பதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரெயில் நிலையத்தில் நின்ற ஒரு பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த லட்சுமி (56), பிரகாஷ் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் சங்ககிரியில் இருந்து 1¼ டன் ரேஷன் அரிசியை ரெயில் மூலமாக கேரளாவுக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.