சேலம் அருகே கனககிரி பகுதியில் நேற்று மாலை பெங்களூருவிலிருந்து கோவை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் மீது மோதியது. இதில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (25), கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த அட்சய துளசி (19) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். இருவரும் ஒரே கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.