தமிழ்நாட்டில் இன்று இரவு (மார்ச் 12) 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 12, 13) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.