இந்த நிலையில் இப்ராகிம் பாதுஷா, அகமது பாஷாவிடம் இன்னும் ரூ. 10 ஆயிரம் கடன் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த தொகையை அகமதுபாஷா தர மறுத்ததோடு, அவர் கடனுக்கு எழுதிக்கொடுத்த பத்திரத்தை இப்ராகிம் பாதுஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்து, அகமதுபாஷாவின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றார்.
இது குறித்து அகமதுபாஷா சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இப்ராகிம் பாதுஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.