சேலம்: மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

சேலம் கோரிமேடு பொன் நகர் பகுதியில் தனியாக இருந்த 65 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த 19 வயது வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றார். மூதாட்டியின் கூச்சலால் அக்கம் பக்கத்தினர் வந்து வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், தாயார் மருத்துவ சிகிச்சைக்காக பணம் இல்லாததால் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி