சேலத்தில் பழைய இரும்பு கடையில் திருடிய வாலிபர் கைது

சேலம் எருமாபாளையம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் ராஜய்யா (65) என்பவரின் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 10 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹபீப் பாட்ஷா (19) என்பவர் இரும்பு கடையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி