இந்த நிலையில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அந்த சிலிண்டரைத் திருடிக்கொண்டு தப்பி ஓடுவதைப் பார்த்த கருணாநிதி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர் கன்னங்குறிச்சி போலீசருக்குத் தகவல் தெரிவித்து அந்த வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரித்தபோது அவர் கோரிமேடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.