சேலம்: பஸ்ஸில் செல்போனை திருடிய வாலிபர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்த சீனிவாசன், நேற்று (ஏப்ரல் 7) காலை புதிய பேருந்து நிலையத்திற்கு டவுன் பேருந்தில் சென்றபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை ஒருவர் திருடினார். பேருந்து நின்றதும் திருடன் இறங்கி ஓட முயன்றபோது, சீனிவாசன் அவரை துரத்திப் பிடித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், திருடியவர் அரூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி