சேலம்: புதிய பஸ் ஸ்டாண்டில் பைக் திருடிய வாலிபர் கைது

சேலம் மெய்யனூர் ஆலமரத்துக்காட்டைச் சேர்ந்த கார் டிரைவர் குமரேசன், புதிய பேருந்து நிலையத்தில் தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று, குடிநீர் தொட்டி அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை ஒரு வாலிபர் பூட்டை உடைத்து திருட முயன்றார். இதைப் பார்த்த குமரேசன் கூச்சலிட, அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரைப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரைச் சேர்ந்த அருண்குமார் எனத் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி