சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த அருண், நேற்று சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜங்ஷனுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். 5 ரோடு அருகே சென்றபோது, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் திருடி தப்பி ஓட முயன்றார். அவரைப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தெலுங்கானா மாநிலம் ஹயாத் நகரைச் சேர்ந்த சாமுவேல் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.