சேலம் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த ஜான்மைக்கேல்ராஜ் (43) நேற்று அரசு டவுன் பஸ்ஸில் பழைய பஸ் நிலையத்திற்குச் சென்றார். அப்போது பஸ்ஸில் இருந்த வாலிபர் ஒருவர், ஜான்மைக்கேல்ராஜின் பாக்கெட்டில் இருந்த ரூ.720 மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கினார். பயணிகள் அவரைப் பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த யுவனேஷ் (23) எனத் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து பணம், செல்போனைப் பறிமுதல் செய்தனர்.