சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

சேலம் ஜங்ஷனில் விசாகப்பட்டினம்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவில்லாத பெட்டியில் இருந்து இறங்கிய நவீன்ராஜ் (27) என்ற வாலிபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையில் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி