சேலம் ரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று தென் அழகாபுரத்தைச் சேர்ந்த ரித்திக்குமார் (20) என்பவரை கைது செய்தனர். இவர் வெளியூர்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.