சேலம் அன்னதானப்பட்டி மூனாங்கரடு தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது, தாதகாப்பட்டியை சேர்ந்த பிரபு (24) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.