கொண்டலாம்பட்டி அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சேலம் கொண்டலாம்பட்டி சந்தைபேட்டையில் ஓட்டல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த கணேசன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி