சேலம் அன்னதானப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 2018ல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜமாணிக்கத்தை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.