சேலத்தில் சித்தியை தாக்கிய வாலிபர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவில் வசிக்கும் சசிகலா (50) என்பவரின் வீட்டில், அவரது அக்காள் தமிழரசியின் மகன் இளங்கோவன் (33) தங்கியிருந்தார். வீட்டை காலி செய்யுமாறு சசிகலா கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு இளங்கோவன், சசிகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சசிகலா அளித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி