சேலத்தில் வெட்டியானை தாக்கிய வாலிபர் கைது

சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், அதே பகுதியைச் சேர்ந்த மணிபாரதி (25) என்பவர் வெங்கடேஷுடன் தகராறில் ஈடுபட்டு, கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வெங்கடேஷ் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாரதியை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி