சேலம் வீராணம் அருகே கோரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி கார்த்திகேயன் (37) மீது 2 வீடுகளில் நகை, பணம் திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீராணம் போலீசார் அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-4-ல் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, கார்த்திகேயனுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு என மொத்தம் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பூவராகவன் தீர்ப்பளித்தார்.