அப்போது திருமண அழைப்பிதழில் அத்தையான லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர் போடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே கடந்த 24-ந் தேதி பூபாலன் அதே பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது அவரிடம் அங்கு வந்த மணிகண்டன் தகராறு செய்துள்ளார். அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அன்றைய தினம் இரவு மணிகண்டன் அத்தை லட்சுமியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அவர் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை வீட்டின் மரக்கதவில் ஊற்றி தீவைத்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
கதவில் தீ எரிவதை பார்த்து ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் உடனடியாக கதவில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதுகுறித்து லட்சுமி செவ்வாய்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.