தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே முருகன் (43) என்பவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த முகமது லுக்மான்கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.