சேலத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயம்

ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி கோமதி, தனது 7 மற்றும் 5 வயது குழந்தைகளுடன் சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தைகளுடன் வெளியே சென்ற கோமதி வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கணவர் சிவா கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் மாயமான இளம் பெண்ணையும் குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி