ஓமலூர் அருகே மெதுவாக சென்ற ரயிலில் பெண்ணிடம் நகைப்பறிப்பு

பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் மகள் பலிஸ்னாவுடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிகிச்சை அளிக்க கோயம்புத்தூர் செல்ல எஸ்வந்த்பூர் விரைவு ரயிலில் பயணித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு ஓமலூர் ரயில் நிலையம் அருகே ரயில் மெதுவாக சென்றபோது, படுத்திருந்த சிவரஞ்சனியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி