சம்பவத்தன்று குமார் குதிரைபாலிக்காடு பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த சூர்யா, அவருடைய நண்பர்களான வினோ (26), கீர்த்திவாசன் (21) ஆகியோர் குமாரை வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கியதாகவும், தடுக்க வந்த குமாரின் உறவினர் மணிகண்டன் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி சூர்யா, வினோ, மணிகண்டன், கீர்த்திவாசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், சூர்யா, வினோ, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.