பாலகிருஷ்ணன் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பாலகிருஷ்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 12-ந்தேதி பாலகிருஷ்ணன் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி இந்திராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும் உடந்தையாக இருந்ததாக கூறி இந்திராவின் உறவினரான மாரியம்மாள் (60) வீட்டிற்கு சென்ற பாலகிருஷ்ணன் ஜன்னல் வழியாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது மாரியம்மாள் தீயில் உடல் கருகி உயிருக்கு போராடினார், மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், சிறையில் உள்ள பாலகிருஷ்ணன் மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.