சேலத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரேவதி (36) என்பவர், சம்பவத்தன்று இரவு வீட்டின் முதல் மாடியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரேவதி உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி