சேலத்தில் மருந்து கடையில் செல்போன் திருடிய பெண் கைது

சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருடைய மனைவி பேபிலட்சுமி (வயது 22). இவர் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று காலை இவர் செல்போனை மேஜையில் வைத்துவிட்டு கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். 

அப்போது அவரது செல்போன் திருட்டுப் போனது. இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிச்சிப்பாளையம் வீட்டுவசதி வாரியப் பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவருடைய மனைவி ஜன்மா (39) என்பவர் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி