சேலத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கலைச்செல்வி, கடந்த ஆண்டு கணவர் சதீஷ்குமார் மஞ்சள் காமாலை நோயால் இறந்ததில் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 7 ஆம் தேதி வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இவர், அதிக மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி