சேலம் புதுரோடு, சித்தனூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் செயல்படும் மூன்று டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, விதவை கோலத்தில் வந்த பெண்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அரசு விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் இந்தக் கடைகளால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ஏராளமான பெண்கள் கணவர்களை இழந்து விதவையாக மாறி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், உடனடியாக இந்தக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.