கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் ஜவகர் மில் வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா தலைமையில் வாகன ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் தனியார் பள்ளி பஸ், வேன்களின் பிரேக், டயர், முதல் உதவி பெட்டி உள்ளிட்டவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பள்ளி திறப்புக்கு முன்பு வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படுகிறது.