சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்கட்டமாக கிறிஸ்துவ மக்கள் 10 பேருக்கு கழக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்து வழங்கினார். அப்போது ஜெப ஐக்கிய சபையின் போதகர் செந்தில்குமார், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு இனிப்புகள் மற்றும் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபில் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு