சேலத்தில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கீட்டு படிவம் வினியோகம்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இணைந்து வீடு வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 15-வது வார்டு சக்தி நகரில் நடைபெற்ற இந்தப் பணியை, தி. மு. க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வன்னியர் நல வாரிய உறுப்பினருமான வக்கீல் எஸ். ஆர். அண்ணாமலை பார்வையிட்டார். அவர், படிவங்களை முறையாக நிரப்பி வழங்க வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி