சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தன்னார்வலர்கள் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் கலந்துகொண்டு, தன்னார்வலர்கள் 6 மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும், உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காது, நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என பல்வேறு கட்டளைகளை பிறப்பித்து, அதன்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.