விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன், வருகிற 13-ஆம் தேதி நடைபெறவிருந்த விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு போலீசார் 5000 பேர் மட்டுமே பங்கேற்க நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறினார். இதனால், கூட்டத்தை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றி உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.