சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்கள் கைது

சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மூனாங்கரடு பகுதியில் ரோந்து பணியின்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஹரிபாஸ்கர் (20) மற்றும் விக்னேஷ் (20) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி