சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் விபத்து மற்றும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று மாலை திடீரென தீப்பிடித்ததில், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.