சேலம் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது

சேலம் ரயில் கஞ்சா கடத்தி வந்து இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து ரூ.6,600 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அசாமில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்தனர். 

அவர்களிடம் ரூ.6,600 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த தவ்பிக் அகமது, திருப்பூர் பாலாஜி நகரை சேர்ந்த தமிம் அன்சாரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசிடம் ஒப்படைத்தனர். இப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி