சேலம் களரம்பட்டி பகுதியில் வெங்கடேசன் என்பவர் நேற்று முன்தினம் நடந்து சென்றபோது, மாரி, ராஜ்கிரன், விக்னேஷ்வரன் ஆகியோர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 6,300 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து கிச்சிபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் மாரி மற்றும் ராஜ்கிரன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். விக்னேஷ்வரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.