சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரைச் சேர்ந்த விஜய்தமிழன் பார்த்திபன் (51) போக்குவரத்து துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இவர் சேலம் தெற்கு தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. ஆவார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவருக்கு பிரியா என்ற மனைவியும், நேத்திரா என்ற மகளும் உள்ளனர். விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய நாள் முதல் சேலம் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும், பின்னர் சேலம் மாவட்ட விஜய் நற்பணி மன்ற தலைவராகவும், சேலம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவராகவும் இருந்துள்ளார். விஜய் த.வெ.க. தொடங்கிய நாள் முதல் கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.