அத்துடன் மதுவுக்கும் அடிமையானதால் கடனை அடைக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது. இதுதவிர ராஜாவுக்கு பணம் கொடுத்தவர்கள் அதனை திருப்பிக் கேட்டு வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ராஜாவை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.