எனவே, இந்த மாநாட்டில் வணிகர்களின் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அமேசான் உள்ளிட்ட கார்ப்பரேட் கம்பெனிகளால் 20 சதவீதம் வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் தங்களது கடைகளை மூடியுள்ளனர். வணிகர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்க தவறினால் அகில இந்திய அளவில் வணிகர்கள் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளோம். தமிழக அரசின் பட்ஜெட்டில் வணிகர்களுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பட்ஜெட் வியாபாரிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விளக்குவேன்: செங்கோட்டையனுக்கு நயினார் சவால்