சேலத்தில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

சேலம் அம்மாபேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியின் போது சாமி தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து, பெட்டிக்கடை உரிமையாளர் மாது (52) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி