சேலத்தில் ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த புகையிலை பொருட்கள்

சேலம் ரயில்வே போலீசார் நேற்று (ஏப்ரல் 8) திப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியின் கழிவறை பகுதியில் கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை கைப்பற்றி சோதனை செய்ததில், அதில் 6 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, யார் கடத்தி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி