சேலம்: ஜாமீனில் வந்த முதல் நாளிலேயே கைவரிசை.. திருடன் கைது

சேலம் கோட்டை ஹபீப் தெருவைச் சேர்ந்த முகமது ரபி, வரதப்பன் தெருவில் நடத்தி வரும் மளிகைக்கடையில் பிரதாப் (33) என்பவர் ரூ. 80 ஆயிரம் திருடினார். இவர் மீது ஏற்கனவே அடிதடி, திருட்டு என 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 20 நாட்களுக்கு முன்பு சூரமங்கலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 13-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த முதல் நாளிலேயே மளிகைக்கடையில் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி