வெயிலின்தாக்கம் அதிகம் குழாய் பொருத்திய மண்பானைகளுக்கு மவுசு

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயிலின் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிலர் மண்பானைகளில் தண்ணீரை வைத்து குடிக்க தொடங்கியுள்ளனர். 

இதனால் மண்பானைகளின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் நகரில் உள்ள கடைகளில் மண்பானைகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. குறிப்பாக வின்சென்ட் பகுதியில் உள்ள பல கடைகளில் விற்பனைக்காக மண்பானைகள் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குழாய் பொருத்திய மண்பானைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி