இதுபற்றி தகவல் எதுவும் மாணவனுக்கு தெரியாமல் இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், மாணவனின் தந்தையை தொடர்பு கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர், உங்களது மகனின் வங்கி கணக்கிற்கு ரூ. 2½ லட்சத்தை தவறுதலாக அனுப்பி உள்ளார். அந்த பணத்தை அவருக்கு திரும்ப வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதையடுத்து மாணவன் முகமது அர்ஷத், அவரது தந்தை முகமது காசிம் ஆகியோர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று வங்கியின் மேலாளர் மூலம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். மாணவனின் இந்த மனிதநேயமிக்க செயலை வங்கி ஊழியர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.